• Wed. Oct 7th, 2026

24×7 Live News

Apdin News

மகாராஷ்டிர அரசுப் பள்ளி விடுதியில் 82 மாணவர்களுக்கு பாதி மொட்டை அடிக்கப்பட்ட அவலம்

Byadmin

Oct 7, 2026


மகாராஷ்டிராவில் அரசு உண்டு உறைவிட பள்ளியில் 82 மாணவர்களுக்கு பாதி மொட்டை அடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

மகாராஷ்டிராவின் சந்திராபூர் சிமூர் தாலுகா ஜம்புல்காட்டில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளி விடுதியில் 82 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

மாவட்டத்தில் அரசு நடத்தும் உண்டு உறைவிட பள்ளியில் 82 மாணவர்களுக்கு பாதி மொட்டை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முடி திருத்தம்

கடந்த சனிக்கிழமை மாணவர்களுக்கு முடி திருத்துவதற்காகப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த விடுதி கண்காணிப்பாளர் மாணவர்களின் தலைமுடியில் பாதியை மட்டும் வெட்டுமாறு முடிதிருத்துபவரிடம் கூறியுள்ளார்.

பாதி மொட்டை

அதன்படி மாணவர்கள் பாதி மொட்டையடிக்கப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

இதனால் மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த உயர் அதிகாரிகள் பள்ளியைத் தொடர்புகொண்டு, மாணவர்களின் தலைமுடியை ஒரே சீராக வெட்டுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

பின்னர் நள்ளிரவில் மீண்டும் அந்த மாணவர்களுக்கு முடிதிருத்தம் செய்யப்பட்டது.

விளக்கம்

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி முதல்வர் பிரசாந்த்கிரி, இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளித்த பள்ளி கண்காணிப்பாளர், இந்த முடிவு மாணவர்களின் நலனுக்காக எடுக்கப்பட்டது என்றும், இதன் பின்னணியில் எந்தத் தவறான நோக்கமும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

By admin