நாளை (நவம்பர் 1) இந்தியா கூட்டணி தலைமையில் எதிர்க்கட்சிகளின் பேரணிக்கு மம்தாவை நேரில் சந்தித்து அபிஜித் தீப்கே ஆதரவு தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (எஸ்ஐஆர்) எதிரான போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜித் தீப்கே, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை சந்தித்துள்ளார்.
சந்திப்பு
டெல்லியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி உடைய வீட்டில் வைத்து இந்த சந்திப்பு இன்று நிகழ்ந்தது.
நாளை (நவம்பர் 1) டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு முன்னதாக இருவரும் சந்தித்தனர்.
இதன்போது எஸ்ஐஆர் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பான பிரச்சினைகளை எதிர்த்து தொடர்ந்து குரல் எழுப்பி வரும் அபிஜீத் தீப்கே மற்றும் பிற இளம் ஆர்வலர்களின் முயற்சிகளை மம்தா பாராட்டினார்.
மம்தா பாராட்டு
இந்த சந்திப்பு குறித்து மம்தா கூறுகையில், இளம் தலைமுறையின் இயக்கத்தை குறித்து மிகவும் பெருமைப்படுவதாக தெரிவித்தார்.
நாளை நடைபெறவுள்ள பேரணிக்கு அபிஜீத் தீப்கேவும் அவரது சகாக்களும் தங்களது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளதாக மம்தா மேலும் கூறினார்.
சிஜேபி தொண்டர்களுக்கு தனது கட்சியின் முழு ஆதரவும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எஸ்ஐஆர் மற்றும் தேர்தல் ஆணையம் தொடர்பான பிரச்சினைகளில் சிஜேபயும் நாட்டின் இளைஞர்களும் நடத்திய போராட்டங்கள் மறக்கப்படக்கூடாது என்று மம்தா கூறினார்.
இந்த இயக்கம் பல நெருக்கடிகளை கடந்து முன்னோக்கி சென்றிருப்பதும், இளைஞர்களின் கனவுகளும் நம்பிக்கைகளும் நனவாகி வருவதும் பாராட்டுக்குரியது என்றும் அவர் கூறினார்.