• Wed. Nov 25th, 2026

24×7 Live News

Apdin News

மரண தண்டனை, கைது எச்சரிக்கைக்கு மத்தியிலும் ஷேக் ஹசீனா வங்கதேசம் திரும்ப விரும்புவது ஏன்?

Byadmin

Nov 25, 2026


ஷேக் ஹசீனா

படக்குறிப்பு, ஷேக் ஹசீனா டிசம்பர் 16 ஆம் தேதி வங்கதேசம் திரும்புவதாகக் கூறியுள்ளார் (கோப்புப் படம்).

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, டிசம்பர் 16-ஆம் தேதி இந்தியாவில் இருந்து தனது நாட்டுக்குத் திரும்புவதாகத் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்தியாவில் வசித்து வருகிறார்.

டிசம்பர் 16-ஆம் தேதி வங்கதேசத்தில் வெற்றி தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போருக்குப் பிறகு இதே நாளில்தான் வங்கதேசம் சுதந்திரம் பெற்றது.

செய்தி நிறுவனமான அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, செவ்வாய்க்கிழமை தனது நாடு திரும்பும் தேதியை அறிவித்த ஹசீனா, தேசிய விமான நிறுவனம் மூலம் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு தற்போதைய பிரதமர் தாரிக் ரஹ்மானிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹசீனாவின் செய்தித் தொடர்பாளர் சையத் மொசம்மல் அலி வெளியிட்ட அறிக்கையில், “2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி, வங்கதேச விமானம் மூலம் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார். தற்போது டெல்லியில் இருந்து டாக்காவுக்கு விமானம் மூலம் அவர் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

“வங்கதேசத்தின் வெற்றி தினமான டிசம்பர் 16-ஆம் தேதியை அவர் நாடு திரும்புவதற்காகத் தேர்வு செய்திருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்று ஹசீனாவின் உதவியாளர் அபு ஒபைதா அரின் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

By admin