• Sun. Nov 29th, 2026

24×7 Live News

Apdin News

‘மர்மங்கள் நிறைந்த புதன் கிரகம்’ – புதிய விண்கலத்தின் ஆய்வில் என்ன தெரிய வரலாம்?

Byadmin

Nov 29, 2026


புதனின் தழும்புகள் நிறைந்த மேற்பரப்பின் நெருக்கமான காட்சி

படக்குறிப்பு, புதனின் தழும்புகள் நிறைந்த மேற்பரப்பின் நெருக்கமான காட்சி

    • எழுதியவர், ரெபெக்கா மோரெல்
    • எழுதியவர், அலிசன் பிரான்சிஸ்

    • எழுதியவர், டோனி ஜாலிஃப்
    • பதவி, பிபிசி நியூஸ் சயின்ஸ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கிட்டத்தட்ட 600 கோடி மைல்கள் (1,000 கோடி கி.மீ.) தொலைவைக் கடந்து, எட்டு ஆண்டுகள் நீண்ட பயணத்துக்குப் பிறகு, ‘பெப்பிகொலம்போ’ என்ற விண்கலம் தனது இலக்கை அடைந்துள்ளது. தற்போது அது புதன் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

மிகவும் கடுமையான சூழலில் இந்த விண்கலம் இயங்கி வருகிறது. சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் புதன். அங்கு வெப்பநிலை 430 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து, மைனஸ் 180 டிகிரி செல்சியஸ் வரை குறையவும் செய்யும். மேலும், தீவிரமான சூரியக் கதிர்வீச்சும் அந்தக் கிரகத்தைத் தொடர்ந்து தாக்குகிறது.

இதுவரை புதன் கிரகம் குறித்து மிகக் குறைவாகவே ஆராயப்பட்டுள்ளது. இந்த விண்வெளித் திட்டம், புதன் கிரகம் தொடர்பான பல முக்கிய மர்மங்களுக்கு விடை காணும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

சூரியனுக்கு மிக அருகில் இருந்தாலும், புதன் கிரகத்தின் பள்ளங்களில் பனி இருப்பது ஏன்? அதன் மேற்பரப்பில் ஆங்காங்கே காணப்படும் மர்மமான பள்ளங்கள் எவ்வாறு உருவாகின? என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை காண்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்.

“சூரியக் குடும்பத்தின் உள் பகுதியில் உள்ள கிரகங்களில், புதன் கிரகம் மீது போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்றே நினைக்கிறேன். ஆனால், அதுவே இந்த கிரகத்தை மிகவும் ஆர்வமூட்டும் ஒன்றாக மாற்றுகிறது,” என்கிறார் இந்தத் திட்டத்தின் முதன்மை ஆய்வாளர்களில் ஒருவரும், லெஸ்டர் பல்கலைக்கழகப் பேராசிரியருமான எம்மா பன்ஸ்.

By admin