• Tue. Aug 4th, 2026

24×7 Live News

Apdin News

மலேசியாவில் பள்ளி மாணவியை கொன்றதாக 14 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு – விவாதத்தை தூண்டிய வழக்கில் என்ன நடந்தது?

Byadmin

Aug 4, 2026


யாப் ஷிங் ஸுயென் என்று சிறுமி

பட மூலாதாரம், Aaple Wong

படக்குறிப்பு, பள்ளியின் கழிவறையில் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட யாப் ஷிங் சுயென்

    • எழுதியவர், டெஸ்ஸா வோங்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

மலேசியாவில், சக மாணவியை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பதின்ம வயது சிறுவன் ஒருவருக்கு எதிரான வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. சமூக ஊடகங்கள் குழந்தைகளின் நடத்தையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள முக்கிய வழக்காக இது பார்க்கப்படுகிறது.

கடந்த அக்டோபர் மாதம் 16 வயதான யாப் ஷிங் சுயென் எனும் சிறுமியைக் கொலை செய்ததாக அந்தச் சிறுவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தலைநகர் கோலாலம்பூரின் புறநகர் பகுதியில் உள்ள அவர்களது மேல்நிலைப் பள்ளியின் கழிவறையில், பலமுறை கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நிலையில் அந்தச் சிறுமி கண்டெடுக்கப்பட்டார்.

சம்பவம் நடந்தபோது 14 வயதாக இருந்த அச்சிறுவன், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் பல ஆண்டு காலங்கள் சிறையில் கழிக்க நேரிடும்.

சமூக ஊடகங்கள் அந்தச் சிறுவனைத் தூண்டியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகக் காவல்துறை முன்னதாகக் கூறியிருந்தது.

By admin