UPSL அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிரிக்கெட் போட்டி, தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நேற்று (31) இரவு பெய்த கனமழை காரணமாக மழைநீர் தேங்கியுள்ளமையால், மைதானத்தின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு, வீரர்களின் பாதுகாப்பு மற்றும் போட்டியை சீராக நடத்துவதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட போட்டி நடைபெறும் புதிய திகதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அத்துடன், இந்தத் தீர்மானத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

