சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை காலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.1,10,720க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் மாலை மீண்டும் சவரனுக்கு ரூ.960 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,760க்கு விற்பனையாகிறது.
காலை கிராமுக்கு ரூ.40 குறைந்த நிலையில் ரூ.13,840க்கு விற்பனையானது. இந்நிலையில் மாலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ.13,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும் , ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.