• Fri. May 8th, 2026

24×7 Live News

Apdin News

மாவட்ட ஆட்சியர் செல்போனை ஹேக் செய்து தகவல்களை விற்ற உதவியாளர்கள் கைது

Byadmin

May 8, 2026


மத்தியப்பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் பிரதீப் நாராயண் யாதவ் என்பவர் ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், ஆட்சியரின் அலுவலகத்தில் இருந்து பல முக்கிய தகவல்கள் தொடர்ந்து வெளியே கசியவிடப்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து ஆட்சியரின் அலுவலகத்தில் உதவியாளர்களாக வேலை பார்த்து வந்துள்ள மூன்று பேர், ஆட்சியரின் கைப்பேசியை ஹேக் செய்து, ரகசியகமாக கண்காணித்து வந்துள்ளனர்.

இவர்கள் ஆட்சியரின் கைபேசியை ஹேக் செய்து, பல வருடங்களாக ரகசிய தகவல்களை வெளியே விற்றுவந்துள்ளனர்.

இதையடுத்து அலுவலக ஊழியர்களை சோதனை செய்த ஆட்சியர், அவர்கள் ஹேக் செய்ய பயன்படுத்திய கருவிகளை கைப்பற்றினார்.

தாமோ மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளர்களாக பணிபுரிந்து வந்த அஜய் குமார் அசதி, ஜெய்தேவ் அஹிர்வார் மற்றும் சச்சின் கரே உள்ளிட்ட நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டின் பாதுகாப்பில் ஒரு மாவட்ட ஆட்சியர் காட்டிய இந்த அர்ப்பணிப்பும், தைரியமும், மற்றும் எந்தவொரு தவறும் நேராதபடி மிக நேர்த்தியாக அவர் அமைத்த அந்த வியூகமும் தற்போது நாடு முழுவதும் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

By admin