• Thu. Jul 30th, 2026

24×7 Live News

Apdin News

முகமது நபி பற்றிய கருத்தால் இலங்கை தமிழருக்கு சௌதியில் சிறை தண்டனை – என்ன நடந்தது?

Byadmin

Jul 29, 2026


முகமது நபி, இஸ்லாம், இலங்கை, சௌதி அரேபியா, இலங்கை நாட்டவர் கைது

பட மூலாதாரம், Facebook/Anojan

படக்குறிப்பு, இலங்கையைச் சேர்ந்த அனோஜனுக்கு சௌதி அரேபியாவில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

ஃபேஸ்புக் பதிவொன்றின் கீழ் முகமது நபி குறித்து கருத்து பதிவிட்ட சம்பவம் தொடர்பில் இலங்கையைச் சேர்ந்த தமிழர் அனோஜன் என்பவர் சௌதி அரேபிய காவல்துறையால் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் அந்த நாட்டு நீதிமன்றத்தினால் அவருக்கு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டு நீதிமன்றத்தினால் ஐந்து ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 3 மில்லியன் ரியால் (இலங்கை மதிப்பில் சுமார் 27 கோடி ரூபாய்) அபாராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.

இந்த நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் அனோஜன் தனது குடும்பத்தாருக்கு தொலைபேசி ஊடாக தெரிவித்துள்ளதாக அவரது தந்தையான தம்பிராஜா சிவராஜா பிபிசி தமிழிடம் கூறினார்.

அனோஜனை விடுதலை செய்யும் நோக்கில் தமது குடும்பத்தினர் பல்வேறு வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவரது தந்தை மற்றும் அவரது சகோதரன் ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.

என்ன நடந்தது?

இலங்கையின் ஊவா மாகாணத்திலுள்ள பிரசித்து பெற்ற முருகன் ஆலயமான கதிர்காமம் ஆலயத்தின் வருடாந்த பாத யாத்திரை கடந்த மாதம் ஆரம்பமாகியிருந்தது.

By admin