• Thu. Nov 12th, 2026

24×7 Live News

Apdin News

முருகன் சிலைக்காக திருவாவடுதுறை – தருமபுரம் ஆதீனம் இடையே மோதல் ஏன்?

Byadmin

Nov 12, 2026


கந்தசஷ்டி, முருகர், திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், மயிலாடுதுறை, மயூரநாதர் சுவாமி கோயில்

முருகன் சிலையை முன்வைத்து சுமார் மூன்று மணிநேரத்துக்கும் மேலாக திருவாவடுதுறை மற்றும் தருமபுரம் ஆதீன மடங்களின் நிர்வாகிகள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கந்தசஷ்டி உற்சவத்துக்கு முருகர் சிலையைக் கொடுக்காமல் பூட்டி வைத்துவிட்டதாகவும் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் திருவாவடுதுறை ஆதீன நிர்வாகிகள் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை திருவாவடுதுறை ஆதீனம் தரப்பு நிர்வாகிகள் மறுக்கின்றனர்.

“தற்போது இரு தரப்பிலும் சுமூக உடன்பாடு ஏற்பட்டுவிட்டது” என பிபிசி தமிழிடம் மயிலாடுதுறை உட்கோட்ட டி.எஸ்.பி தெரிவித்தார்.

மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் அபயாம்பிகை சமேத மயூரநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இந்தக் கோவில் உள்ளது.



By admin