• Wed. Jun 17th, 2026

24×7 Live News

Apdin News

மெஸ்ஸி அல்ஜீரிய வீரரின் காலை மிதித்தது சர்ச்சையாவது ஏன்?

Byadmin

Jun 17, 2026


மெஸ்ஸி, அய்ஸா மண்டி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போட்டியின் முதல் பாதியில் அல்ஜீரியாவின் அய்ஸா மண்டியின் பின்னங்காலில் மெஸ்ஸி மிதித்ததால் அவர் தடுமாறி விழுந்தார்.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

அர்ஜெண்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, 2026 ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பையில் இன்று ஒரே நாளில் பல்வேறு சாதனைகள் படைத்திருக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த உலகக் கோப்பையில் களமிறங்கிய மெஸ்ஸி, அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். அவரது ஹாட்ரிக் காரணமாக அர்ஜெண்டினா அணி 3-0 என வெற்றி பெற்றது.

அதிக வயதில் உலகக் கோப்பை ஹாட்ரிக் அடித்தவர், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோலடித்தவர், அதிக உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்றவர் எனப் பல்வேறு சாதனைகளைப் படைத்தார் மெஸ்ஸி.

அதேசமயம், இந்தப் போட்டியின்போது சிவப்பு அட்டை கொடுத்து மெஸ்ஸி வெளியேற்றப்பட்டிருக்கவேண்டும் என்றும், அவர் மெஸ்ஸி என்பதால் அவருக்கு சலுகை வழங்கப்பட்டதாகவும் ஒருபக்கம் விவாதம் எழுந்திருக்கிறது.

மெஸ்ஸியின் ஹாட்ரிக்கால் வென்ற அர்ஜெண்டினா

கான்சாஸ் சிட்டி ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே மெஸ்ஸி மிகச் சிறப்பாக விளையாடினார். வலது விங்கில் தொடங்கியிருந்தாலும், நடுப்பகுதிக்கு நகர்ந்து வந்து டிஃபண்டர்களுக்கு சவால் கொடுப்பது, அவ்வப்போது நடுகளத்தோடு இணைந்து அட்டாக்கைத் தொடங்குவது என முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

By admin