• Wed. Jul 29th, 2026

24×7 Live News

Apdin News

மேகேதாட்டு அணை: மத்திய அரசு கூறுவது போன்று தமிழகத்தின் அனுமதி தேவை இல்லையா?

Byadmin

Jul 29, 2026


காவிரி, மேகேதாட்டு, உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு, கர்நாடகா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காவிரி (கோப்புப் படம்)

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டில் புதிய அணை கட்ட தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் ஒப்புதல் தேவை என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்தக் குறிப்பும் இல்லை என, மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்துள்ளது விவாதப் பொருளாகியுள்ளது.

மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் சமீபத்தில் மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய ஜல் சக்தி துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரி பதில் அளித்துள்ளார்.

தமிழ்நாடு – கர்நாடகா இடையேயான மேகேதாட்டு அணை விவகாரம் மீண்டும் அரசியல் அரங்கில் விவாதிக்கப்பட்டு வரும் வேளையில் மத்திய அரசின் இந்தப் பதில் வந்துள்ளது.

இதற்கு தமிழ்நாட்டில் பெருமளவில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி வேளாண் அமைப்புகள் வரை இதற்கு எதிர்வினையாற்றி உள்ளனர்.

இந்த நிலையில் இவ்விவகாரத்தில் தலையிட்டு மத்திய அமைச்சரின் பதிலைத் திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மோதிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

By admin