• Tue. Nov 10th, 2026

24×7 Live News

Apdin News

மேகேதாட்டு: தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகா அணை கட்ட முடியுமா?

Byadmin

Nov 10, 2026


மேகேதாட்டு அணை: தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகம் கட்ட முடியுமா?
படக்குறிப்பு, தமிழ்நாடு – கர்நாடகா இடையே நீறு பூத்த நெருப்பாக நிலவி வரும் ‘மேகேதாட்டு அணை திட்டம்’ தற்போது மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது.

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

தமிழ்நாடு – கர்நாடகா இடையே நீறு பூத்த நெருப்பு போல நிலவி வரும் ‘மேகேதாட்டு அணை திட்டம்’ தற்போது மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பிரதமர் மோதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், “கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்ட உத்தேசித்துள்ள இடத்தை ஒன்றிய அரசு அதிகாரிகள் பார்வையிட்டது சரியல்ல. கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி எவ்வித சட்டபூர்வ/நிர்வாக அனுமதியை வழங்கக்கூடாது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதற்குப் பதிலளித்துப் பேசிய கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், “மாநிலங்களுக்கு இடையிலான நீர் தொடர்பான மோதல்களுக்கான காலம் முடிந்துவிட்டது. மேகேதாட்டு விவகாரத்தில், ஒற்றுமையுடனும் ஒத்துழைப்புடனும் செயல்படுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜயிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்று கூறியதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

இதற்கு யாரிடமும் அனுமதி பெற வேண்டியது இல்லையென்றும் தமிழ்நாட்டில் இருந்து ஒரு குழுவை அனுப்புமாறு முதலமைச்சர் விஜயிடம் கோரியதாகவும் டி.கே.சிவக்குமார் தெரிவித்ததாக ஏ.என்.ஐ செய்தி கூறுகிறது.



By admin