• Tue. Nov 10th, 2026

24×7 Live News

Apdin News

பவன் கல்யாண் – அனா கொனிடேலா திடீரென பிரிந்து வாழ முடிவு செய்தது ஏன்? கூட்டறிக்கையில் என்ன கூறியுள்ளனர்?

Byadmin

Nov 10, 2026


அனா கொனிடெலா, பவன் கல்யாண் (கோப்புப் படம்)

படக்குறிப்பு, அனா கொனிடெலா, பவன் கல்யாண் (கோப்புப் படம்)

    • எழுதியவர், கரிகிபாடி உமாகாந்த்
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாணும் அவரது மனைவி அனா கொனிடெலாவும் (அனா லெஷ்னேவா) பரஸ்பரப் புரிதலுடன் பிரிவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதற்கு முன்பு இருவரும் விவாகரத்து செய்யப்போவதாகப் பல வதந்திகள் வெளியான நிலையில், 2026 நவம்பர் 9ஆம் தேதி இருவரும் கூட்டறிக்கை வெளியிட்டு, தங்களது 13 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தகவலை ஜனசேனா கட்சியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. ஜனசேனா கட்சியை சேர்ந்த, பெயர் வெளியிட விரும்பாத தலைவர்கள் இதை பிபிசியிடம் உறுதிப்படுத்தினர்.

பரஸ்பர முடிவின் அடிப்படையிலேயே தாங்கள் பிரிந்து வாழத் தீர்மானித்துள்ளதாக இருவரும் அந்தக் கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் கூட்டறிக்கையைத் தவிர இருவரும் தனிப்பட்ட முறையில் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.



By admin