• Fri. Oct 30th, 2026

24×7 Live News

Apdin News

மொஹட்டா அரண்மனை: இந்து தொழிலதிபர் தன் மனைவிக்காக கட்டிய ‘கராச்சியின் தாஜ்மஹால்’

Byadmin

Oct 30, 2026


 மொஹட்டா அரண்மனை

படக்குறிப்பு, கராச்சியில் உள்ள மொஹட்டா அரண்மனையின் புகைப்படம்

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மக்கள் கிளிஃப்டன் கடற்கரைக்குச் செல்லும்போது, இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக் கற்களால் கட்டப்பட்ட பழமையான கட்டடம் ஒன்றை காண முடியும். அந்தக் கட்டடத்தின் மீது பார்வையைப் பதிக்காமல் அதைக் கடந்து செல்வது கடினம்.

கராச்சியில் உள்ள இந்தக் கட்டடம் மொஹட்டா அரண்மனை என்று அழைக்கப்படுகிறது. இந்த அரண்மனையைப் பார்க்கும்போது, கடலின் ஆர்ப்பரிக்கும் அலைகள் கிளிஃப்டன் கடற்கரையில் மோதிய காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

அந்தக் காலகட்டத்தில்தான், சிவ் ரத்தன் சந்திர மொஹட்டா என்ற இந்து மார்வாரி தொழிலதிபர் கடலுக்கு அருகில் இந்தக் கட்டடத்தைக் கட்டும் யோசனையை முன்வைத்தார். அவர் தனது மனைவிக்காக இந்த அரண்மனையைக் கட்டினார்.

இந்த அரண்மனையின் கட்டுமானத்தில் ஜோத்பூரி இளஞ்சிவப்பு நிறக் கற்கள் பிரத்யேகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ரயில் தண்டவாளங்களும் அமைக்கப்பட்டன.



By admin