• Fri. Oct 30th, 2026

24×7 Live News

Apdin News

நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் ஹரீஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’

Byadmin

Oct 30, 2026


தமிழ் திரையுலகில் ‘பார்க்கிங்: படத்தின் மூலம் இன்றைய ஜென் ஸீ ரசிகர்களிடத்திலும் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘நூறு கோடி வானவில்’ திரைப்படம் பட மாளிகையில் வெளியாகாமல் நேரடியாக எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறாம் திகதி தீபாவளி திருநாளை கொண்டாடும் வகையில் ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சசி இயக்கத்தின் உருவாகியுள்ள ‘ நூறு கோடி வானவில்’ திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், சித்தி இத்னானி, சின்னி ஜெயந்த், சம்பத் ராஜ், தம்பி ராமையா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார்.

ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மாதவ் மீடியா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாலாஜி காபா தயாரித்திருக்கிறார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து படமாளிகையில் வெளியிடுவதற்காக திரையுலக வணிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இத்திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறாம் திகதியன்று ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் பிரத்யேகமாக டிஜிட்டல் தள பார்வையாளர்களுக்காக திரையிடப்படுகிறது.

இதன் மூலம்  முன்னணி டிஜிட்டல் தளமான ஜீ 5 தங்களுடைய சந்தாதாரர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் தீபாவளி விருந்தாக ‘நூறு கோடி வானவில்’லை சமர்ப்பித்துள்ளது.

By admin