• Mon. Oct 26th, 2026

24×7 Live News

Apdin News

யாழில் மதுபான போத்தல்களை குழி தோண்டி வைத்து விற்பனை செய்தவர் கைது!

Byadmin

Oct 26, 2026


யாழ்ப்பாணம் கொக்குவில் புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள வீடொன்றில், காணிக்குள் குழி தோண்டி மதுபானப் போத்தல்களைப் புதைத்து வைத்து விற்பனை செய்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பௌர்ணமி தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை (25) கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டில் பொலிஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, வீட்டின் பின்புறத்தில் குழி தோண்டி மதுபானப் போத்தல்களைப் புதைத்து வைத்து, சிறு துளையினூடாக அவற்றை எடுத்து விற்பனை செய்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது 187.5 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட 45 மதுபானப் போத்தல்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட நபரைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

By admin