• Mon. Oct 26th, 2026

24×7 Live News

Apdin News

‘சரிந்த ஜி.எஸ்.டி வசூல், அதிகரித்த பணவீக்கம்’ – தமிழ்நாட்டின் தற்போதைய நிலை என்ன?

Byadmin

Oct 26, 2026


'ஜி.எஸ்.டி வசூல் சரிவு, அதிகரித்த பணவீக்கம்' - தமிழ்நாட்டு பொருளாதாரம் மோசமான சூழலை எதிர்கொண்டுள்ளதா?

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழ்நாட்டின் பொருளாதாரத்துடன் தொடர்புடைய ஜி.எஸ்.டி வரி வசூல், சில்லறை பணவீக்கம், உணவுப் பொருள் பணவீக்கம் மற்றும் கடன் பெறுதல் ஆகியவை பற்றி சில முக்கியமான தரவுகள் வெளிவந்துள்ளன. இவை தமிழ்நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை பற்றிய விவாதங்களைக் கிளப்பியுள்ளன.

ஜி.எஸ்.டி வரி வசூல் சரிவு

கடந்த செப்டம்பர் மாதத்துக்கான ஜி.எஸ்.டி வரி வசூல் தொடர்பான தரவுகள் வெளியாகியிருந்தன. ஆனால் முந்தைய ஆண்டின் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி வசூல் 5% வரை சரிந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தேசிய சராசரியும் பிற பெரிய மாநிலங்களின் சராசரியும் நேர்மறையாக இருந்த நிலையில் தமிழ்நாட்டின் சராசரி எதிர்மறையாக இருந்தது விவாதப் பொருளானது.

அதிகரித்த பணவீக்கம்

கடந்த செப்டம்பர் மாதத்தின் பணவீக்கம் தொடர்பான தரவுகளும் சமீபத்தில் வெளியாகியிருந்தன. அதன்படி இந்தியாவின் பெரிய மாநிலங்களில் (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள்) தமிழ்நாடு தான் சில்லறை பணவீக்கத்திலும் உணவுப் பொருள் பணவீக்கத்திலும் முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வுடன் இந்தத் தரவுகள் விவாதிக்கப்பட்டன.



By admin