மேயாத மான் இயக்குநர் ரத்னகுமார் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி உள்ள காதல் திரைப்படம் 29. இப்படத்தில் விது மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், ஷெனாஸ் பாத்திமா மற்றும் பிரேம் குமார் ஆகியோர் பிற கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.
இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர், பாடல்கள் எல்லாம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் மே.8ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.