• Thu. Jul 30th, 2026

24×7 Live News

Apdin News

ராகுல் காந்தி பேச்சால் மக்களவையில் அமளி – ‘நாடாளுமன்ற மரபுக்கு எதிரானது’ என பாஜக எதிர்ப்பு

Byadmin

Jul 30, 2026


ராகுல் காந்தி பேச்சால் மக்களவையில் அமளி - 'நாடாளுமன்ற மரபுக்கு எதிரானது' என பாஜக எதிர்ப்பு

பட மூலாதாரம், ANI

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

வினாத்தாள் கசிவு தொடர்பான ‘பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்த மசோதா, 2026’ குறித்த விவாதம் புதன்கிழமையும் மக்களவையில் தொடர்ந்தது.

செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தியின் கருத்தைச் சுற்றி கடும் அமளி ஏற்பட்ட நிலையில், புதன்கிழமை மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு குறித்து விவாதம் எழுந்துள்ளது.

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, புதன்கிழமை வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து பேசினார். தனது உரையின் தொடக்கத்தில், சில இளம் மாணவர்களைக் குறிப்பிட்டு அவர் பயன்படுத்திய சொல் ‘நாடாளுமன்ற மரபுக்கு எதிரானது’ என பாஜக கூறியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் கிரண் ரிஜிஜு, அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டாம் என்று ராகுல் காந்தியிடம் கேட்டுக்கொண்டார்.

ராகுல் காந்தி பேசியது என்ன?

ராகுல் காந்தி

பட மூலாதாரம், ANI

மக்களவையில் தனது உரையைத் தொடங்கிய ராகுல் காந்தி, “நமது நாட்டின் எதிர்காலமான இளைஞர்கள் தெருக்களில் வெளிப்படுத்திய உணர்வுகளைப் பார்த்தபோது எனக்கு மிகுந்த உற்சாகம் ஏற்பட்டது. அது கோபமோ, வன்முறையோ, வெறுப்போ அல்ல. அது இந்த நாட்டின் இளைஞர்கள், எதிர்கால தலைமுறையினர் வெளிப்படுத்திய ஆழமான உணர்வு. பாஜகவில் உள்ள என் நண்பர்கள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் அந்த உணர்வை மதிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்றார்.

By admin