• Tue. Jul 28th, 2026

24×7 Live News

Apdin News

ராஜா முத்துப்பாண்டி: கபடி வீரராக தொடங்கி காமன்வெல்த் வெள்ளி வரை – கோவில்பட்டி வீரரின் பயணம்

Byadmin

Jul 28, 2026


ராஜா முத்துப்பாண்டி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராஜா முத்துப்பாண்டி

கோவில்பட்டியை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் 65 கிலோ எடை பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் சுமை தூக்கும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பேச்சியம்மாள். இவர் தீப்பெட்டி கம்பெனியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு சுரேஷ்குமார் மற்றும் ராஜா முத்துப்பாண்டி என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த ராஜா முத்துப்பாண்டிதான் தற்போது வெள்ளிப்பதக்கம் வென்றவர்.

கபடி விளையாட்டு வீரர்

2018ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 6வது இடத்தில் இருந்த ராஜா முத்துப்பாண்டி இம்முறை வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றது மிகவும் சந்தோஷமாக இருப்பதாக கூறுகிறார் பளுதூக்கும் வீரர் ராஜா.

கிளாஸ்கோ நகரில் இருந்து பிபிசி தமிழிடம் பேசிய ராஜா, ”நான் வெயிட்லிஃப்டிங் தொடங்கி 14 ஆண்டுகள் ஆகிறது. இது என்னுடைய இரண்டாவது காமன்வெல்த் போட்டி. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்டு ஆறாவது இடத்தை பிடித்தேன். அந்த முறை என்னால் பதக்கம் வாங்க முடியாமல் போய் விட்டது.

அதன் பின்னர் எனக்கு தொடர்ந்து சில அறுவை சிகிச்சை நடந்ததால் காமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாமல் போனது எனக்கு மிகவும் வருத்தம் அளித்தது. ஆனால் நான் விடா முயற்சியுடன் தொடர்ந்து பயிற்சி செய்து கம்பேக் கொடுத்தேன்.” என்றார்

By admin