• Wed. Nov 18th, 2026

24×7 Live News

Apdin News

ராஜீவ்-சோனியா காந்தியின் காதல், தனது காதலி பற்றி ராகுல் காந்தி பகிர்ந்துகொண்டது என்ன?

Byadmin

Nov 18, 2026


ராகுல் காந்தி

படக்குறிப்பு, ராகுல் காந்தி தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

டெல்லியில் சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ராகுல் காந்தி, தன்னைப் பற்றியும் தனது பெற்றோரைப் பற்றியும் பல தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். தனது காதலி குறித்தும் அவர் குறிப்பிட்டார். அவரது இந்தக் கருத்துகள் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

மேடைக்கு வந்தவுடன், “அரசியல் பேசக்கூடாது என்று எனக்கு மிகவும் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என ராகுல் காந்தி கூறினார்.

இதைக் கேட்டதும், மக்களுக்குப் புதிதாக இருக்கக்கூடிய சில விஷயங்களை ராகுல் காந்தி பகிர்ந்துகொள்ளப் போகிறார் என்பது புரியத் தொடங்கியது. அவர் பேசிக்கொண்டிருந்தபோது, அவ்வப்போது பார்வையாளர்கள் சிரிப்பதையும், சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவதையும் காண முடிந்தது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, தனது தாயார் சோனியா காந்தியின் ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ என்ற சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில், சோனியா காந்தியே குறிப்பிடாத பல கதைகளைப் பகிர்ந்துகொண்டார்.

 சோனியா காந்தியும்

படக்குறிப்பு, ராஜீவும் சோனியா காந்தியும் சந்தித்த அதே உணவகத்திற்குத் தானும் சென்றிருந்ததாக ராகுல் காந்தி கூறினார்.

கேம்பிரிட்ஜ் உணவகத்தின் கதை

ராஜீவ் காந்தியும் சோனியா காந்தியும் முதன்முதலில் சந்தித்த உணவகம் குறித்து ராகுல் காந்தி குறிப்பிட்டார். கேம்பிரிட்ஜில் தனது தாய் ஊஞ்சலில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கும் புகைப்படம் குறித்தும் பேசினார். தான் குழந்தையாக இருந்தபோது தனது தாய் அப்படித்தான் இருந்ததாக ராகுல் கூறினார்.

By admin