0
‘நினைத்தது யாரோ’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருந்தாலும்… சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ரஜித் மேனன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சிட்டுக்குறிஞ்சி ‘ திரைப்படம் – ரொமான்டிக் ஃபேண்டஸி திரில்லர் ஜேனரில் தயாராகி வருகிறது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் வி. ஜே. மீனாட்சி சுந்தரம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படத்தில் ரஜித் மேனன், தீப்ஷிகா, நக்ஷா சரண், வி ஜே பப்பு, ஜி. எம். குமார், எல். வி. ஆதவன், ராம்ஸ், ஹலோ கந்தசாமி, தேனி முருகன், சுஜாதா, கராத்தே ராஜா ஆகியோருடன் நடிகர் ஸ்ரீ ராம் கார்த்திக் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஏ. பிரான்சிஸ் ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மாறா இசையமைத்துள்ளார். ஃபேண்டஸி ரொமான்டிக் ஹாரர் திரில்லராக தயாராகும் இந்த திரைப்படத்தை பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. ஜூட் ஆனந்த் தயாரித்திருக்கிறார்.
1983 ஆம் ஆண்டு பின்னணியில் கதைக்களம் விவரிக்கப்பட்டிருப்பதால்.. இப்படத்திற்காக கொடைக்கானல் எனும் மலை பகுதியில் எண்பது ஏக்கர் காணி பரப்பளவில் புதிதாக கிராமம் ஒன்றை நிர்மாணித்து படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. விரைவில் இப்படத்தின் டீசர்- ட்ரெய்லர் ஆகியவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.