• Sat. Jul 25th, 2026

24×7 Live News

Apdin News

‘முதல் விக்கெட்’ – தர்மேந்திர பிரதான் ராஜிநாமா பற்றி சிஜேபி நிறுவனர் கூறியது என்ன?

Byadmin

Jul 25, 2026


காணொளிக் குறிப்பு,

‘முதல் விக்கெட்’ – தர்மேந்திர பிரதான் ராஜிநாமா பற்றி சிஜேபி நிறுவனர் கூறியது என்ன?

பிரசுரிக்கப்பட்டது

மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலகியதைத் தொடர்ந்து, காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே பேசியபோது, “இந்த நாட்டின் இளைஞர்கள் ஒன்று சேர்ந்தால், யாரையும் தலை வணங்க வைக்கவும், அவர்களை ராஜிநாமா செய்ய வைக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

மேலும் “நாடு முழுவதும் எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் அனைவரிடமும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இன்று மாலை 6 மணிக்கு, நீட் காரணமாக உயிரிழந்தவர்களுக்காக, அவர்களின் மரணத்திற்கு தர்மேந்திர பிரதானே பொறுப்பு எனக் கூறி, உங்கள் மாவட்டங்களில் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் பேரணியை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். இது முதல் விக்கெட், நாம் இதோடு நிற்கப் போவதில்லை, இது வெறும் தொடக்கம்தான்,” என்று கூறியுள்ளார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin