• Sat. Nov 14th, 2026

24×7 Live News

Apdin News

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் எங்கெல்லாம் மழை பெய்யலாம்?

Byadmin

Nov 14, 2026


வங்கக்கடலில் மூன்றாவது புயல், சென்னை, தமிழ்நாடு, வானிலை நிலவரம், கனமழை எச்சரிக்கை

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“அதன்பிறகு, இது வட-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16-ஆம் தேதி மாலை வாக்கில் மத்திய வங்கக் கடலில் தீவிரமடைந்து புயலாக மாறக்கூடும்,” என்றும் வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு கரைக்குத் திரும்ப அறிவுறுத்தல்

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த அறிவிப்பின்படி, மீனவர்கள் அந்தமான் கடல் பகுதி மற்றும் அந்தமான் – நிக்கோபார் தீவுகளைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நவம்பர் 16-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு நவம்பர் 17-ஆம் தேதி வரையிலும், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு நவம்பர் 15 முதல் 18-ஆம் தேதி வரையிலும், மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நவம்பர் 16 முதல் 19-ஆம் தேதி வரையிலும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin