• Sun. Aug 23rd, 2026

24×7 Live News

Apdin News

வங்கதேசத்தில் ஓய்வுபெற்ற இந்து ஆசிரியர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை – என்ன நடந்தது?

Byadmin

Aug 23, 2026


கைது செய்யப்பட்டவர்கள் யார்?

பட மூலாதாரம், SHARIER MIM

படக்குறிப்பு, போலீஸார், இரு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

வங்கதேசத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ரங்பூர் மாவட்டத்தில், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கொலைச் சம்பவத்தை நிகழ்த்திய பின்னர், அந்த வீட்டின் மாடியில் இருவரும் போதைப் பொருள் பயன்படுத்தியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மிகக் குறுகிய காலத்திலேயே இந்தக் கொலை வழக்கின் மர்மத்தைத் தாங்கள் கண்டுபிடித்துவிட்டதாக ரங்பூர் காவல் ஆணையர் முகமது அப்துல் மபூத் தெரிவித்துள்ளார்.

ஆனால், உயிரிழந்தவரின் சகோதரர், இந்தச் சம்பவம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் ஓய்வுபெற்ற ஆசிரியரையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்த பிறகு, அந்த வீட்டிலேயே 6 முதல் 7 மணி நேரம் தங்கியிருந்ததாக ஒப்புக்கொண்டனர் என்று ரங்பூர் மாநகர போலீஸ் துப்பறியும் பிரிவு தலைவர் சனாதன் சக்ரவர்த்தி தெரிவித்தார்.

By admin