• Mon. May 4th, 2026

24×7 Live News

Apdin News

‘வருவாய் பகிர்வு’ முறையில் சம்பளம் பெறக்கோரும் தயாரிப்பாளர்கள் – நடிகர் சங்கம் கூறும் பதில் என்ன?

Byadmin

May 4, 2026


கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சனிக்கிழமை ஒரு நாள் வேலை நிறுத்தம் நடந்தது. இதனால், தனுஷ், சிம்பு, விஷால், விஜய்ஆண்டனி நடிக்கும் படங்கள் உட்பட 35க்கும் அதிகமான படங்களின் படப்பிடிப்பு ரத்தாகி உள்ளது.

சென்னை மட்டுமல்ல, வெளியூரில் நடந்த படப்பிடிப்புகளும் ரத்தானதால் தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பு, ஆயிரக்கணக்கான சினிமா தொழிலாளர்களும் வேலை இழந்தனர்.

ஏன் இந்த வேலை நிறுத்தத்திற்கு காரணமாக நடிகர்கள் மீது தயாரிப்பாளர்கள் கூறும் புகார் மற்றும் இதற்கு நடிகர்கள் சங்கம் அளிக்கும் விளக்கம் என்ன? என்பது குறித்து இந்த செய்தியில் காணலாம்.

ஏன் வேலை நிறுத்தம்?

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர்களான எஸ்.கதிரேசன், ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், ”வருவாய் பகிர்வு’ என்ற முறையில் நடிகர்கள் சம்பளம் வாங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் அறிவித்துள்ளோம் என கூறியுள்ளனர்.

இதற்கான காரணங்களை விளக்கிய அவர், “தயாரிப்பாளர்களின் நலனில் நடிகர்கள் பங்கேற்க வேண்டும் என்று வருவாய் பகிர்வு சம்பள முறை குறித்து தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திடம் கடந்த 3 ஆண்டுகளாக கடிதம், பத்திரிகை வாயிலாக தெரிவித்தும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. ஆகவேதான் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது ” என்று கூறினர்

By admin