36
நடிகர் விஜய்யின் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘கில்லி’ படத்தில் அவரது தங்கையாக நடித்து பிரபலமான நான்சி ஜெனிபர் , கார்த்திக் என்பவரைத் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
விஜய் – சூர்யா இணைந்து நடித்த நேருக்கு நேர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நான்சி ஜெனிபர் விஜய், த்ரிஷா இணைந்து நடித்த கில்லி படத்தில் புவனா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.
கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த நான்சி ஜெனிபர், இந்து மதத்தைச் சேர்ந்த கார்த்திக்கை சுபமுகூர்த்த தினமான இன்று இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். நேற்று சனிக்கிழமை (14) இரவு கிறிஸ்தவ முறைப்படி இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
கடற்கரை ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில், மணமகன் கார்த்திக் தாலி கட்டும் காட்சிகள் மற்றும் மணமக்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.
‘கில்லி’ படத்தில் இவரது ‘புவனா’ (அரிசி மூட்டை) கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
அரிசுமூட்டை என விஜய் அந்த படத்தில் செல்லமாக அழைப்பது போலவே தமிழ் சினிமா ரசிகர்களும் நான்சி ஜெனிபரை அழைத்து வருகின்றனர்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகில் கொண்டாடப்பட்டு வருகிறார்.
திருமண பந்தத்தில் இணைந்துள்ள இந்தத் தம்பதியினருக்குத் தமிழ் சினிமா ரசிகர்களும் நண்பர்களும் இணையத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.