• Fri. Nov 13th, 2026

24×7 Live News

Apdin News

விடுதலைப் புலிகள், பிரபாகரன், ராஜீவ் காந்தி படுகொலை குறித்து சோனியா காந்தி புத்தகத்தில் கூறியவை என்ன?

Byadmin

Nov 13, 2026


ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, புத்தகம், பிரபாகரன், விடுதலைப் புலிகள். ராஜீவ் படுகொலை

படக்குறிப்பு, தேர்தல் பிரசாரத்தில் ராஜீவ் காந்தியுடன் சோனியா காந்தி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவியும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சோனியா காந்தி, தனது நினைவுக் குறிப்பான ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ் (Belonging: A Journey of Love)’ நூலில், ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நேரடியாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

1987-ஆம் ஆண்டு இந்திய – இலங்கை அமைதி ஒப்பந்தத்துக்குப் பிறகு இந்திய அமைதிப்படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களே பிரபாகரனுக்குப் பழிவாங்கும் உணர்வை ஏற்படுத்தியதாகவும், அதுவே 1991-ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியின் படுகொலைக்குக் காரணமானதாகவும் அவர் எழுதியுள்ளார்.

மேலும் அவர் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு என்றும் அந்த அமைப்பினர்தான் ராஜீவ் காந்தியை கொலை செய்தனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்னணியில் இருந்த அரசியல் சூழலையும், அப்போது தனது குடும்பம் எதிர்கொண்ட அச்சுறுத்தல்களையும் இந்த நூலில் சோனியா காந்தி விவரித்துள்ளார்.

ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, புத்தகம், பிரபாகரன், விடுதலைப் புலிகள். ராஜீவ் படுகொலை

படக்குறிப்பு, ஜெயவர்த்தனேவுடன் ராஜீவ் காந்தி

இந்திய – இலங்கை அமைதி ஒப்பந்தமும் பிரபாகரனின் எதிர்ப்பும்

இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனே, விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தைத் தனியாக எதிர்கொள்ள முடியாத சூழலில் இருந்ததாகவும் இலங்கையில் நீடித்துவந்த இன மோதலுக்குத் தீர்வு காணும் நோக்கில் இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி தலையிட்டதாகவும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

By admin