• Fri. Jul 10th, 2026

24×7 Live News

Apdin News

வியட்நாம் போலி ஆடம்பரப் பொருட்களின் உலக மையமாக மாறியது எப்படி? அரசு திடீர் நடவடிக்கை எடுப்பது ஏன்?

Byadmin

Jul 9, 2026


லூயிஸ் வுட்டனின் பைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரஞ்சு டிசைனர் பிராண்டான லூயிஸ் வுட்டனின் பைகள், போலி டிசைனர் சந்தையில் மிகவும் பிரபலமானவற்றில் ஒன்றாக உள்ளன.

    • எழுதியவர், கேவின் பட்லர்
    • பதவி, பிபிசி நியூஸ், சிங்கப்பூர்

    • எழுதியவர், துவாங் லே மற்றும் டக் ஹா
    • பதவி, பிபிசி உலக சேவை , பாங்காக்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹோ சி மின் நகரின் புறநகர்ப் பகுதியில் இருந்த இரண்டு சாதாரணக் கிடங்குகளில் வியட்நாம் போலீசார் அதிரடி சோதனை நடத்தியபோது, நைக், அடிடாஸ், கிராக்ஸ் மற்றும் குஸ்ஸி ஆகிய நிறுவனங்களின் லோகோக்கள் பொறிக்கப்பட்ட 23,000-க்கும் மேற்பட்ட காலணிகளைக் கண்டறிந்தனர்.

ஆனால், அந்தப் பொருட்களுக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்த காலணிகள் அனைத்தும் போலியானவை.

சுமார் 2 பில்லியன் வியட்நாம் டாங் (சுமார் 76,053 டாலர்) மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்ட இந்த சோதனை, பல தசாப்தங்களாக இயங்கி வந்த கள்ளச் சந்தை தொழிலுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.

அந்த இடத்திலிருந்து வெறும் 30 கிலோமீட்டர் தொலைவில், ஹோ சி மின் நகரின் சுற்றுலாப் பகுதியிலுள்ள ஒரு சந்தையில், வெளிநாடுகளில் 900 அமெரிக்க டாலர் வரை விற்கப்படும் அதே மாதிரியான போலி செருப்புகள் வெறும் 30 டாலருக்கு விற்கப்படுகின்றன.

அவற்றுடன், “சேனல்” கைப்பைகள், “பிராடா” டி-ஷர்ட்டுகள் மற்றும் “ரோலக்ஸ்” கடிகாரங்கள் எனப் பலவிதமான போலிப் பொருட்களும் அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

By admin