• Wed. Sep 23rd, 2026

24×7 Live News

Apdin News

‘வீட்டு நீச்சல் குளத்தில் அடிக்கடி வந்து குளிக்கும் கரடிகள்’ – இந்த குடும்பம் என்ன செய்கிறது?

Byadmin

Sep 23, 2026


லாஸ் ஏஞ்சலஸ், கரடிகள், வனவிலங்குகள்

பட மூலாதாரம், @poolbearlife

படக்குறிப்பு, மேடியும் அவளுடைய இரண்டு நாய்க்குட்டிகளும் பிரையன் கார்டன் மற்றும் ரிக்கார்டோ மார்டினெஸின் நீச்சல் குளத்தில் நேரம் செலவிடுவதை மிகவும் விரும்புகின்றன

    • எழுதியவர், இசபெல் கெர்ரட்சன்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

லாஸ் ஏஞ்சலிஸில் உள்ள பிரையன் கார்டன் மற்றும் ரிகார்டோ மார்டினெஸ் ஆகியோரின் வீட்டில் இருக்கும் நீச்சல் குளத்தில் கருப்புக் கரடிகள் ஜாலியாக ஓய்வெடுக்க விரும்புகின்றன.

தெற்கு கலிபோர்னியா முழுவதும் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், இந்தத் தம்பதியினர் தங்களது ‘கரடி விருந்தினர்களின்’ வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். அதோடு, இந்த வனவிலங்குகளுடன் தாங்கள் எவ்வாறு இணக்கமாக வாழ்ந்து வருகிறோம் என்பதையும் வெளிப்படுத்துகின்றனர்.

லாஸ் ஏஞ்சலிஸில் தான் வாங்கவிருந்த வீட்டின் நீச்சல் குளத்தில் கருப்புக் கரடிகள் நீந்துகின்றன என்று கேள்விப்பட்டபோது, கார்டன் முதலில் மிகவும் அச்சப்பட்டார்.

“நான் நிஜ வாழ்க்கையில் கரடியை நேரில் பார்த்ததேயில்லை. ‘நாங்கள் முள்வேலி வைத்து மிகப்பெரிய தடுப்புச் சுவரைக் கட்டிவிடலாம்’ என்று தான் முதலில் சொன்னேன்” என்று அவர் நினைவுகூர்கிறார்.

ஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தங்கள் வீட்டு நீச்சல் குளத்தில் ஒரு கரடி குடும்பம் விளையாடுவதையும், தனது தோட்டத்தில் ஓடித் திரிவதையும் பார்த்து ரசிக்கத் தொடங்கிவிட்டார். இந்த ‘விருந்தினர்கள்’ வாரத்திற்குப் பல முறை இங்கு வந்து செல்கின்றனர்.

By admin