• Sun. Jul 19th, 2026

24×7 Live News

Apdin News

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் 89 வயதில் காலமானார்

Byadmin

Jul 19, 2026


சோபர்ஸ் வெஸ்ட் இண்டீஸ், அவரது சொந்தத் தீவான பார்படாஸ், நாட்டிங்ஹாம்ஷையர் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்காக விளையாடினார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெஸ்ட் இண்டீஸ், அவரது சொந்தத் தீவான பார்படாஸ், நாட்டிங்ஹாம்ஷையர், தெற்கு ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்காக சோபர்ஸ் விளையாடியுள்ளார்

வரலாற்றின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்படும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் புகழ்பெற்ற முன்னாள் ஆல்-ரவுண்டரான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் தனது 89வது வயதில் காலமானார்.

சோபர்ஸ் 1954 மற்றும் 1974க்கு இடையே 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 8,032 ரன்கள் குவித்ததுடன் 235 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

ரசிகர்களை மகிழ்விக்கும் இடது கை பேட்ஸ்மேனான சோபர்ஸ், 1958இல் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 365 ரன்கள் எடுத்தார். இந்தச் சாதனை 36 ஆண்டுக்காலம் டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோராக நீடித்தது. அவர் சுழற்பந்து, வேகப்பந்து இரண்டையும் வீசக்கூடிய மிகச் சிறந்த பன்முகத்தன்மை கொண்ட பந்துவீச்சாளராகவும் திகழ்ந்தார்.

நாட்டிங்ஹாம்ஷையர் அணிக்காக கவுன்டி கிரிக்கெட்டிலும் விளையாடிய சோபர்ஸுக்கு, கிரிக்கெட் துறைக்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக 1975ஆம் ஆண்டு ‘சர்’ பட்டம் வழங்கப்பட்டது. மேலும், விஸ்டன் அமைப்பால் 20ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 1968இல் நாட்டிங்ஹாம்ஷையர் அணியில் அவர் விளையாடியபோது, ஒரு ஃபர்ஸ்ட் கிளாஸ் (முதல்தர) போட்டியில் ஒரே ஓவரில் 6 பந்துகளிலும் 6 சிக்ஸர்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை சோபர்ஸ் படைத்தார்.

By admin