• Sun. Jul 19th, 2026

24×7 Live News

Apdin News

உத்தவ் சிவசேனாவின் 6 எம்.பி.க்கள் கட்சித் தாவலை அங்கீகரித்த சபாநாயகர்.. திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.களுக்கும் தனி இருக்கை!

Byadmin

Jul 19, 2026


மகராஷ்டிராவில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவிலிருந்து பிரிந்து சென்ற 6 அதிருப்தி மக்களவை உறுப்பினர்கள் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஷிண்டே சிவசேனாவுடன் இணைந்ததை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளார்.

சஞ்சய் உத்தம்ராவ் தேஷ்முக், சஞ்சய் ஹரிபாவ் ஜாதவ், பாவ்சாகேப் ராஜாராம் வக்காசவ்ரே, ஓம்பிரகாஷ் பூபால்சிங் நிம்பால்கர், சஞ்சய் தினா பாட்டீல் மற்றும் நாகேஷ் பாபுராவ் பாட்டீல் அஷ்டிகர் ஆகிய 6 எம்பிக்களின் கட்சி மாற்றம் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மக்களவையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் பலம் 7லிருந்து 13 ஆக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில், 16 எம்பிக்களை கொண்ட தெலுங்கு தேசம் கட்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கூட்டணி கட்சியாக ஷிண்டேவின் சிவசேனா உருவெடுத்துள்ளது.

மறுபுறம், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியின் பலம் வெறும் 3 எம்பிக்களாகக் குறைந்துள்ளது.

உத்தவ் அணியில் இருந்த 9 எம்பிக்களில் 6 பேர் (மூன்றில் இரண்டு பங்கு) பிரிந்து சென்றதால், இவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது என்று சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

By admin