• Sun. Jul 19th, 2026

24×7 Live News

Apdin News

தி ஒடிஸி: ‘மயக்கும் கதாநாயகன், பிரமாண்ட சண்டைக் காட்சிகள்’ – நோலன் காட்டிய புதுமைகள்

Byadmin

Jul 19, 2026


'மாயமும் மனிதநேயமும் நிறைந்தது' - தி ஒடிஸி பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

பட மூலாதாரம், Universal Pictures

    • எழுதியவர், கேரின் ஜேம்ஸ்
    • பதவி,
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில், மேட் டேமன், ஆன் ஹாதவே மற்றும் டாம் ஹாலண்ட் நடித்துள்ள பிரமாண்டமான திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

‘தி ஒடிஸி’ திரைப்படத்தைப் பார்க்கும் வரை, ட்ரோஜன் குதிரையின் உள்ளே எவ்வளவு துர்நாற்றமாக இருந்திருக்கும் என்பது குறித்து நான் நினைத்துப் பார்த்ததே இல்லை.

சிறிய விவரமோ, மிகப்பெரிய ஆக்‌ஷன் காட்சியோ எதுவாக இருந்தாலும், கிறிஸ்டோபர் நோலனின் இந்தப் படம் அதன் பிரமாண்டத்தாலும், லட்சியத்தாலும் தனித்துவமாகத் திகழ்கிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஹோமர் எழுதிய இந்த காவியக் கவிதையை மேற்கத்திய இலக்கியத்தின் அடித்தளமாக நீங்கள் நினைத்திருக்கலாம் அல்லது பள்ளி நாட்களில் படிக்க வேண்டிய சலிப்பான பாடமாக நினைத்திருக்கலாம். ஒருவேளை அவை இரண்டுமாகவும் இருக்கலாம்.

ஆனால், நோலனின் இந்த பிரமாண்டமான திரைப்பட வடிவம், இலக்கியப் பாடத்தைப் போதிப்பதைவிட, முழுக்க முழுக்க ஒரு ஆக்‌ஷன்–சாகச பிரமாண்ட திரைப்படமாகவே அமைந்துள்ளது.

By admin