• Sun. Jul 19th, 2026

24×7 Live News

Apdin News

ஹோமரின் ஒடிஸியில் கதையின் போக்கை தீர்மானிக்கும் பெண்கள் யார்?

Byadmin

Jul 19, 2026


ஹோமரின் ஒடிஸியில் கதையின் போக்கை தீர்மானிக்கும் பெண்கள்

பட மூலாதாரம், Alamy

    • எழுதியவர், டெய்ஸி டன்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சுமார் 2,800 ஆண்டுகள் பழமையான காவியத்தைத் தழுவி தற்போது திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இது வெறும் வீரச் செயல்களைப் பற்றிய நேரடியான கதை மட்டுமல்ல.

இத்திரைப்படத்தின் நாயகனான ஒடிசியஸ் ஒரு வீரர். ஆனால், அவர் தனது பயணத்தில் சந்திக்கும் பெண்கள், வனதேவதைகள், மந்திரவாதிகள் மற்றும் பெண் கடவுள்களின் தந்திரங்கள், சூழ்ச்சிகள் மற்றும் கவர்ச்சிகளால் தான் இக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதனால் ஒடிசியஸ் மிகவும் சாதாரண மனிதனைப் போல் தோன்றுகிறார்.

தி ஒடிஸி என்ற இந்தக் காவியம் , ட்ரோஜன் போரில் பல ஆண்டுகள் போராடிய பிறகு, தனது ராஜ்ஜியமான இத்தாகாவுக்குத் திரும்ப முயலும் கிரேக்க புராண வீரர் ஒடிசியஸின் பயணத்தை விவரிக்கிறது.

பத்து ஆண்டுகள் நீடிக்கும் அவரது ஆபத்தான கடல் பயணம், கடுமையான சோதனைகளும் அபாயங்களும் நிறைந்ததாக இருக்கிறது. அந்தப் பயணம் தான் இந்த மாதம், மாட் டேமன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள கிறிஸ்டோபர் நோலனின் திரைப்படமாக வெளியாகியுள்ளது.

By admin