• Mon. Jun 22nd, 2026

24×7 Live News

Apdin News

வைபவ் சூர்யவன்ஷி அதிரடிக்குப் பின் சஞ்சய் மஞ்சரேக்கர் ட்ரோல் செய்யப்படுவதுஏன்?

Byadmin

Jun 22, 2026


 வைபவ் சூர்யவன்ஷி, இந்தியா ஏ vs இலங்கை ஏ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஞாயிற்றுக்கிழமை இந்தியா ‘ஏ’ அணிக்காக பேட்டிங் செய்த வைபவ் சூர்யவன்ஷி, 11 பந்துகளில் சாதனை அரைசதம் அடித்தார் (கோப்புப் படம்).

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இலங்கை தம்புல்லாவில் நடைபெற்ற 50 ஓவர் முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய ஏ அணியின் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி பேட்டிங்கை கண்டு முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கரும் அவரது ரசிகராகியுள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி வெறும் 11 பந்துகளில் அரைசதம் விளாசியதோடு, 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்தார். இவரது அதிரடி பேட்டிங்கால் இலங்கை ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி 9 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் என்ற பிரமாண்ட ஸ்கோரை எட்டியது.

இருப்பினும், இதற்கு முன்பு இந்தத் தொடரின் நான்காவது போட்டியில் இந்தியா ஏ – இலங்கை ஏ அணிகள் இடையிலான ஆட்டத்தின் போது ஏற்பட்ட சர்ச்சையால் வைபவ் சூர்யவன்ஷி பேசப்பட்டார்.

அப்போது சஞ்சய் மஞ்ச்ரேக்கர், “நான் இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராகவோ அல்லது மேலாளராகவோ இருந்திருந்தால், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய ஏ அணியின் ஆடும் லெவனில் வைபவ் சூர்யவன்ஷியைச் சேர்த்திருக்க மாட்டேன்” என்று கூறியிருந்தார்.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியைப் பார்த்த பிறகு, சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது எக்ஸ் பக்கத்தில் அவரை பாராட்டும் வகையில் பதிவிட்டிருந்தார்.

By admin