• Sat. Sep 5th, 2026

24×7 Live News

Apdin News

ஸ்ரீரங்கம் கோயில் நில சர்ச்சை: 21 ஏக்கர் பத்திரப் பதிவுக்கு ஐகோர்ட் தடை – ஜி ஸ்கொயர் கூறுவது என்ன?

Byadmin

Sep 5, 2026


ஸ்ரீரங்கம் அறக்கட்டளை நில சர்ச்சை

பட மூலாதாரம், pjhpix/getty Images

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் உள்பட 5 கோயில்களின் சமயப் பணிகளுக்கு ஒப்படைக்கப்பட்ட நிலத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு தடை விதித்து வியாழக்கிழமை (செப்டம்பர் 3) உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அறக்கட்டளையின் நிர்வாகிகள், ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு முறைகேடாக நிலத்தை விற்றுவிட்டதாக, வழக்கின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், “அது கோயில் நிலம் அல்ல. வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம்” என பிபிசி தமிழிடம் ‘ஜி ஸ்கொயர்’ நிறுவனர் பாலா ராமஜெயம் தெரிவித்தார்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு

மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் சுப்ரமணியன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

மனுவில், ‘ஸ்ரீரங்கத்தில் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தில் தனியார் கட்டுமான நிறுவனம், 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் குடியிருப்புப் பகுதியை உருவாக்கியுள்ளதாகவும் அந்த நிலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட மனைகளை விளம்பரப்படுத்தி விற்பனை செய்து வருவதை பக்தர்கள் மூலம் அறிந்தேன்’ எனக் கூறியுள்ளார்.

By admin