7 பேர் உயிரிழப்பு:
நேற்று (புதன்கிழமை) இரவு, சம்புருவின் காவல்துறை தலைவர் டேவிட் என்கோரோய், ஹெலிகாப்டரில் இருந்த ஏழு பேரும் உயிரிழந்துவிட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வாஷிங்டனில், உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் அமெரிக்கர்கள் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை, ஆனால் உயிரிழந்தவர்களில் ஒருவர், என்.பி.சி. யுனிவர்சலுக்கு சொந்தமான, அமெரிக்காவை தளமாக கொண்ட ஸ்பானிஷ் மொழி தொலைக்காட்சியான டெலிமுண்டோ நிலையங்களின் தலைவராகவும் பொது மேலாளராகவும் இருந்த 55 வயதான ஜோஸ் சுவாரெஸ் என்று புளோரிடாவின் மியாமியில் உள்ள ஒரு உள்ளூர் தொலைக்காட்சி நிலையம் தெரிவித்துள்ளது.
“கென்யாவில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஜோஸ் உயிரிழந்தார் என்ற துயர செய்தியை கேட்டு நாங்கள் மிகுந்த துயரமடைந்தோம்,” என்று மியாமியில் உள்ள என்.பி.சி. துணை நிறுவனம், என்.பி.சி. யுனிவர்சல் மற்றும் டெலிமுண்டோ தலைமைகளின் கூட்டறிக்கையில் இருந்து மேற்கோள் காட்டியுள்ளது.
உள்ளூர் சஃபாரி நிறுவனமான ட்ராபிக் ஏர் கென்யா, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காகத் தனது இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பியதாக ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த விமானம் யூரோகாப்டர் EC130 B4 வகையை சேர்ந்தது என்று விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.