• Sun. Aug 9th, 2026

24×7 Live News

Apdin News

ஹோர்மூஸ் நீரிணையைத் திறப்பது குறித்து இரான் – ஓமன் பேச்சு எந்தக் கட்டத்தில் உள்ளது?

Byadmin

Aug 9, 2026


ஹோர்மூஸ் நீரிணை, இரான், ஓமன், பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜாக் பெர்ஜஸ்

    • எழுதியவர், பெர்ன்ட் டெபஸ்மன் ஜூனியர்
    • பதவி, வெள்ளை மாளிகை செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஹோர்மூஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்திற்கான பாதுகாப்பான பாதையை உறுதி செய்யும் ஒப்பந்தம் தொடர்பாக இரானுடன் நேர்மறையான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ஓமன் தெரிவித்துள்ளது. அதேவேளையில், எந்த ஒப்பந்தமும் இந்த முக்கியமான நீர்வழியை உடனடியாக மீண்டும் திறப்பதற்கு வழிவகுக்காது என்று இரான் எச்சரித்துள்ளது.

சனிக்கிழமை இரு தரப்பும் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் காண்பதாகக் கூறின. எனினும், எந்த ஒப்பந்தம் எப்போது இறுதிப்படுத்தப்படும் என்பது இன்னும் தெளிவாக இல்லை. கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் தாக்குதல்களுக்கு எதிராக ஓமனின் வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது.

இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், ஆனால் நீரிணை மீண்டும் திறக்கப்படுவது “மற்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டது” என்றும் கூறினார்.

உலகின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்தின் சுமார் ஐந்தில் ஒரு பங்கு வழக்கமாகச் செல்லும் இந்த நீர்வழியை, அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரியில் தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து இரான் முடக்கியுள்ளது.

சமீப நாட்களில், ஹோர்மூஸ் நீரிணை வழியாக புதிய பாதை ஒன்றை உருவாக்குவது குறித்து இரானும் ஓமனும் ஒப்பந்தம் செய்யும் சாத்தியம் பற்றிய பேச்சுகள் நடைபெற்றன. அந்தப் பாதைக்கான பொறுப்பை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் என்றும், அதன்மூலம் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது.

By admin