• Fri. Jul 17th, 2026

24×7 Live News

Apdin News

100க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா – விதிகளில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்

Byadmin

Jul 17, 2026


இஸ்ரோ விஞ்ஞானி, ராஜினாமா, விண்வெளி ஸ்டார்ட்அப்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பல விஞ்ஞானிகளின் ராஜினாமாவை, இஸ்ரோவுக்கு ஏற்பட்ட ஒரு பின்னடைவாகப் பலரும் கருதுகின்றனர்.

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

நாட்டின் பல்வேறு துறைகளில் புதிய மைல்கற்களைப் படைத்து வரும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் தாக்கம், தற்போது இந்தியாவின் பெருமைமிகு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவையும் உலுக்கியுள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 100 முதல் 120 இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தனியார் விண்வெளி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, விஞ்ஞானிகளின் ராஜினாமாவை ஏற்கும் விதிகளில் மத்திய அரசின் விண்வெளித் துறை தற்போது அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளது.

ககன்யான் மற்றும் பிற முக்கியத் திட்டங்களில் பணியாற்றும் ‘குரூப் ஏ’ விஞ்ஞானிகள் அல்லாத பிற தொழில்நுட்பப் பணியாளர்களின் விருப்ப ஓய்வு மற்றும் ராஜினாமா கோரிக்கைகளை இனி சாதாரண நடைமுறையின்கீழ் ஏற்கப் போவதில்லை என விண்வெளித் துறை தனது அதிகாரபூர்வ சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன்படி, இஸ்ரோவின் பல்வேறு மையங்களின் இயக்குநர்கள் அல்லது தலைவர்கள் இனி தன்னிச்சையாக ராஜினாமாக்களை ஏற்க முடியாது.

“விஞ்ஞானி/பொறியாளர்-எஸ்ஜி நிலைக்குக் கீழுள்ள அதிகாரிகளின் ராஜினாமா கோரிக்கைகளையும், சம்பந்தப்பட்ட மையங்களின் இயக்குநர்கள் அல்லது தலைவர்கள் தங்கள் தெளிவான பரிந்துரைகளுடன் விண்வெளித் துறைக்கு அனுப்ப வேண்டும். துறை அளவிலேயே இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று சுற்றறிக்கை கூறுகிறது.

By admin