• Tue. Jul 14th, 2026

24×7 Live News

Apdin News

15 சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்று வழங்கினார் அமைச்சர் ராஜ்மோகன்!

Byadmin

Jul 14, 2026


பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று தலைமைச் செயலகத்தில், 15 சிபிஎஸ்இ மற்றும் பிற வாரிய பள்ளிகள் துவங்க தடையின்மைச் சான்றுகளையும், 10 தனியார் பள்ளிகளுக்கு துவக்க அனுமதி ஆணைகளையும் வழங்கினார்.

தனியார் பள்ளிகள் எவ்வித இடைத்தரகர்களுமின்றி, தகுதி மற்றும் பாதுகாப்புச் சான்றுகளின் அடிப்படையில் ஆன்லைன் வழியாகவே எளிய முறையில் இந்த சான்றிதழ்களைப் பெறும் புதிய வழிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய மாணவர் சேர்க்கை இல்லாததை காரணம் காட்டி, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் பல அரசுப் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டில் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

By admin