• Mon. Oct 5th, 2026

24×7 Live News

Apdin News

2 மில்லியன் பார்வைகளை கடந்த ‘பிளாக் கோல்டு’ முன்னோட்டம்!

Byadmin

Oct 5, 2026


தமிழ் சினிமாவில் சிறிய முதலீட்டில் உருவாகும் திரைப்படங்களுக்கு சந்தை மதிப்பை உருவாக்கித் தரும் நட்சத்திர நடிகரான வெற்றி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் தீரன் அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தில் வெற்றி, பிரியாலயா, லிவிங்ஸ்டன், அபிராமி வெங்கடாசலம், ஏ .வெங்கடேஷ், ராமர், அருள் டி. சங்கர், சபிதா ராய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சந்தோஷ் குமார் வீராசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எம் எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எம். மூர்த்தி தயாரித்திருக்கிறார்.

இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ஏற்கனவே இருந்த நிலையில், இதன் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னோட்டத்தில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை பன்மடங்கு உயர்த்தி இருக்கிறது.

அத்துடன் பின்னணி இசை, உரையாடல்கள் ஆகியவையும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

இதன் காரணமாக இந்த முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட டிஜிட்டல் பார்வைகளை பெற்று சாதனை படைத்து வருகிறது.

The post 2 மில்லியன் பார்வைகளை கடந்த ‘பிளாக் கோல்டு’ முன்னோட்டம்! appeared first on Vanakkam London.

By admin