• Tue. Jun 16th, 2026

24×7 Live News

Apdin News

3 இந்திய மாலுமிகள் மரணம்: அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை இந்தியாவுக்கான ‘எச்சரிக்கையா’?

Byadmin

Jun 14, 2026


அமெரிக்கா - இந்தியா, 3 இந்திய மாலுமிகள் மரணம், இரான் போர், ஓமன் கடல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வளைகுடா பகுதியில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக இந்தியா அமெரிக்காவிடம் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது; ஆனால், அமெரிக்காவின் சமீபத்திய அறிக்கை இந்த சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது (கோப்புப் படம்).

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

ஓமன் வளைகுடாவில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்தது குறித்து அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ வெளியிட்ட சமீபத்திய அறிக்கை இந்தியாவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசும், ராஜீய நிபுணர்களும் இதனை இந்தியாவுக்கான ஒரு எச்சரிக்கை என்று வர்ணித்துள்ளனர்.

ஜூன் 9 அன்று அமெரிக்க கடற்படை நடத்திய தாக்குதலை அமெரிக்க ராணுவத்தின் மத்தியக் கட்டளை மையம் (CENTCOM) உறுதிப்படுத்தியது; அதனைத் தொடர்ந்து, இந்தியா அமெரிக்காவிடம் தனது எதிர்ப்பைப் பதிவு செய்ததுடன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த உரையாடலின் போது, ​​அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரிடம் தான் ‘கடுமையான எதிர்ப்பை’ பதிவு செய்ததாகவும், இத்தகைய ‘கொடிய தாக்குதல் நியாயமற்றது’ என்றும் ஜெய்சங்கர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை எஸ். ஜெய்சங்கருக்கும் ரூபியோவுக்கும் இடையிலான உரையாடல் குறித்த விவரங்களை அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கைகளை மீறுவதையும், இரானிய எண்ணெயை சட்டவிரோதமாகக் கொண்டு செல்வதையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று ரூபியோ தெரிவித்தார்.

By admin