• Fri. May 22nd, 2026

24×7 Live News

Apdin News

‘7 பட்டியல் பிரிவினர், 2 பிராமணர்கள் – விஜயின் அமைச்சரவை சொல்லும் செய்தி என்ன?

Byadmin

May 22, 2026


தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி, தி.மு.க ஆட்சி, த.வெ.க அமைச்சரவை, வி.சி.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் லீக், பட்டியல் பிரிவினர், அமைச்சரவை விரிவாக்கம்

பட மூலாதாரம், TNDIPR

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் அமைச்சரவை வியாழக்கிழமையன்று (மே 21) விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக நியமிக்கப்பட்ட 23 அமைச்சர்களுக்கு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பட்டியல் சாதியைச் சேர்ந்த ஏழு பேருக்கும் பிராமண சாதியை சேர்ந்த இரண்டு பேருக்கும் அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் நான்கு பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 233 இடங்களில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதையடுத்து, தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருந்த வி.சி.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க ஆட்சியமைத்தது.

கடந்த மே 10 ஆம் தேதியன்று முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றார். அவருடன் த.வெ.க எம்.எல்.ஏக்களான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், செங்கோட்டையன், அருண் ராஜ், கீர்த்தனா, ராஜ்மோகன், டி.கே.பிரபு, வெங்கட்ரமணன் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

By admin