காங்கிரஸ் கட்சி 63 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 22 இடங்களிலும் வெற்றி பெற்றது. பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தரப்பில் யார் முதலமைச்சர் ஆவார என்ற கேள்வி கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. நீண்ட ஆலோசனைக்குப் பிறகு கேரள மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக வி.டி. சதீசன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள வி.டி. சதீசன் ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். அதன்படி கேரளாவின் அடுத்த முதலமைச்சராக வி.டி. சதீசன் வருகிற மே 18-ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.