• Tue. Jul 21st, 2026

24×7 Live News

Apdin News

WC 2026: அர்ஜென்டினா – ஸ்பெயின் இறுதிப்போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? ஓர் அலசல்

Byadmin

Jul 19, 2026


அர்ஜென்டினா - ஸ்பெயின், உலகக்கோப்பை கால்பந்து 2026, மெஸ்ஸி - யமால்

பட மூலாதாரம், Odd ANDERSEN and Roberto SCHMIDT AFP via Getty Images

    • எழுதியவர், செசார் அஸ்பிலிகுவெட்டா
    • பதவி, பிபிசி ஸ்போர்ட் கட்டுரையாளர்
    • இருந்து, மாட்ரிட்டில் இருந்து
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இறுதித் தருணம் வந்துவிட்டது, ஸ்பெயின் தனது இரண்டாவது நட்சத்திரத்தை விரும்புகிறது.

இந்த உலகக் கோப்பையை வெல்ல நாம் அசாதாரணமான எதையும் செய்ய வேண்டியதில்லை – நாம் அமைதியாக இருந்து, அதே வழியில் தொடர்ந்து விளையாடினால் போதுமானது.

பிபிசிக்காக (BBC) இந்தத் தொடரில் பணியாற்றிய பிறகு நான் இப்போது மாட்ரிட் திரும்பியுள்ளேன். ஞாயிற்றுக்கிழமை நடக்கும் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி, 2010-ல் செய்தது போலக் கோப்பையை நாட்டுக்கு எடுத்து வர முடியும் என்று ஒட்டுமொத்த நாடும் நம்புகிறது என்று என்னால் சொல்ல முடியும்.

அந்த நம்பிக்கை பல இடங்களிலிருந்து வருகிறது – யூரோ 2024ஐ வென்றதில் இருந்து, 37 போட்டிகள் கொண்ட நமது நீண்ட தோல்வியறியாத பயணத்தில் இருந்து மற்றும் நிச்சயமாக அரையிறுதியில் பிரான்ஸை நாம் வீழ்த்திய விதத்தில் இருந்து அது கிடைக்கிறது.

இந்த ஸ்பெயின் அணியின் பலம் அதன் கூட்டு ஒற்றுமையிலும் (group) அவர்களின் மனநிலையிலும் தான் உள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து விளையாடும் விதத்தில் ஒரு கூட்டமைப்பாகச் செயல்படுகிறார்கள்; அவர்கள் தங்களுக்கு என்று ஒரு தனித்துவமான அடையாளத்தை நம்புகிறார்கள், அதாவது அவர்கள் எப்போதும் ஒரே மாதிரியான விஷயங்களையே தொடர்ந்து செய்கிறார்கள் என்று அர்த்தம்.

By admin