அவர்கள் மாற்றம் பற்றிப் பேசுவதால், அந்த மாற்றக் காலகட்டத்தில் ஒரு திசையைக் காண்பது மிகவும் முக்கியம். அந்த மாற்றம், நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்குப் பிறகு தொடங்கியது என வைத்துக்கொள்வோம். பின்னர் இங்கிலாந்து தொடர் மற்றும் அதுபோன்றவை வந்தன. அங்கிருந்துதான் அது தொடங்கியது.
முதலில் எளிதான டெஸ்ட் தொடர் என எதுவும் இல்லை. குறிப்பாக, ஒரு மாற்றத்தின் வழியாகச் சென்று கொண்டிருக்கும் இந்திய டெஸ்ட் அணியைப் பார்க்கும்போது என்ன நடந்தாலும் ஒரு எளிதான டெஸ்ட் போட்டிகூட இல்லை.
கடந்த காலங்களில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்வது மிகவும் கடினமான இடமாக இருந்துள்ளது. குறிப்பாக தற்போதைய இந்தச் சூழ்நிலைகளில். எனவே, உலக டெஸ்ட் போட்டியைப் பார்க்கும்போது இது சுவாரஸ்யமாக இருக்கும் என நினைக்கிறேன்.
கடினமான பணி
இன்னும் 9 டெஸ்ட் போட்டிகள் மீதமுள்ளன என நினைக்கிறேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5, இலங்கைக்கு எதிராக 2 மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக 2. நான் தவறாகக் கணிக்கவில்லை என்றால், தோராயமாகச் சொல்வதானால், உலக டெஸ்ட் போட்டியின் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற ஒன்பதில் ஏழு போட்டிகளில் வெற்றிபெற வேண்டும் என நினைக்கிறேன். எனவே, அதுவே ஒரு கடினமான பணி.
அதற்கும் மேலாக, இலங்கையில் இலங்கையுடனும், நியூசிலாந்தில் நியூசிலாந்துடனும் போட்டிகள் உள்ளன. இவை கடினமான சவால்கள். இந்தக் காலகட்டத்தில், எந்தச் சூழ்நிலையிலும், எந்தத் தொடரையோ அல்லது எதிரணியையோ சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.