• Fri. May 29th, 2026

24×7 Live News

Apdin News

அநுராதபுரம் சிறுமி துஷ்பிரயோகம் | நாடளாவிய ரீதியில் போராட்டங்களுக்கு அழைப்பு

Byadmin

May 29, 2026


அநுராதபுரம் எட்டு விகாரைகளின் தலைமை பிக்குவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட சிறுமி மீதான துஷ்பிரயோக வழக்குக்கு நீதி கோரியும், நாடளாவிய ரீதியில் 27, 28, 29 ஆகிய தினங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தியும் நடத்தப்படும் இந்த போராட்டங்களுக்காக சுதந்திரத்துக்கான பெண்கள் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி, நாளை வெள்ளிக்கிழமை 29ஆம் திகதி மன்னார், பண்டாரவளை, பொலன்னறுவை, கேகாலை, நீர்கொழும்பு, சிலாபம், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், நுவர எலிய, திருகோணமலை, கொழும்பு கோட்டை ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடைபெறவுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

By admin