• Fri. May 29th, 2026

24×7 Live News

Apdin News

டிஜிட்டல் தளத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’

Byadmin

May 29, 2026


இந்தியாவின் முன்னணி நுகர்வோர் சந்தையின் தொழிலதிபரும், தமிழ் திரை உலகின் நட்சத்திர நடிகருமான லெஜெண்ட் சரவணன் நடிப்பில் பட மாளிகையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘லீடர்’ திரைப்படம் – எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் அமேசான் ப்ரைம் விடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.‌

இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் உருவான லீடர் திரைப்படத்தில் லெஜெண்ட் சரவணன் , ஆண்ட்ரியா , பாயல் ராஜ்புத் , ஷாம், லால் ,பிரபாகர் , அமிர்தா ஐயர், விடிவி கணேஷ் ஆகியோர் நடிப்பில் எஸ். வெங்கடேஷின் ஒளிப்பதிவில் ஜிப்ரான் வைபோதாவின் இசையில் உருவான இந்த திரைப்படம் – பெற்ற மகளுக்காக தந்தை எதிர்கொள்ளும் சவால்களும் ,  சாகசத்தையும் மையமாக கொண்டு தயாரானதால்… அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

படமாளிகையில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்ற ‘லீடர்’ திரைப்படம்- டிஜிட்டல் தள ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் அமேசான் பிரைம் விடியோ டிஜிட்டல் தளத்தில் தமிழ்- தெலுங்கு- மலையாளம் -கன்னடம்- ஆகிய தென்னிந்திய மொழிகளில் வெளியாகிறது. எக்சன் என்டர்டெய்னரான ‘லீடர்’ திரைப்படம் – படமாளிகை ரசிகர்களை கவர்ந்தது போல் டிஜிட்டல் தள ரசிகர்களிடத்திலும் பாரிய வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

The post டிஜிட்டல் தளத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ appeared first on Vanakkam London.

By admin