• Fri. Nov 13th, 2026

24×7 Live News

Apdin News

‘அன்பை வெளிப்படுத்தும் மொழி’ என ஒன்று உண்டா? ஒருவரையொருவர் புரிந்துகொள்ள தம்பதிகள் என்ன செய்யலாம்?

Byadmin

Nov 13, 2026


மொழி, அன்பு, காதல், உறவுகள்
படக்குறிப்பு, இருவரும் இரண்டாவது முறையாகச் சந்தித்தபோதே, தங்களின் அன்பை வெளிப்படுத்தும் விதங்கள் குறித்து பேசிக்கொண்டனர்

    • எழுதியவர், அஷிதா நாகேஷ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நான் ஊக்கமளிக்கும் வார்த்தைகளைப் பேசுபவள், என் கணவரும் அப்படித்தான். இதுதான் எங்கள் இருவரின் பொதுவான அன்பின் மொழி என்று சொல்லப்படுகிறது.

எங்களுக்குப் பாராட்டுகளைப் பெறுவது பிடித்திருந்தாலும், அவை எங்கள் இருவருக்கும் சற்று சங்கடத்தை ஏற்படுத்துகின்றன.

இருப்பினும், 1992-ஆம் ஆண்டில் அன்பை வெளிப்படுத்துவதற்கும் பெறுவதற்குமான ஐந்து வகைகளை அறிமுகப்படுத்திய அமெரிக்க போதகர் கேரி சாப்மேன் உருவாக்கிய அசல் ‘காதல் மொழிகள்’ இணைய வினாடி வினாவில் பங்கேற்றபோது, எங்கள் இருவரின் முடிவுகளும் ஒரே மாதிரியாக இருந்தன.

ஆனால், இதில் எனக்குச் சந்தேகம் இருக்கிறது. பத்து ஆண்டுகால திருமண வாழ்க்கையில் ஒருவரையொருவர் புரிந்துகொண்ட அனுபவத்தைவிட, இந்தக் கோட்பாடு எங்களைப் பற்றி அதிகம் அறிந்திருக்கிறதா?

அந்த ஐந்து காதல் மொழிகள்:

By admin